Skip to main content
சிங்கப்பூர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

சிங்கப்பூர்-தாய்லந்து காற்பந்து ஆட்டம்: 7 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்த சீட்டுகள்!

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்-தாய்லந்து காற்பந்து ஆட்டம்: 7 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்த சீட்டுகள்!

கோப்புப் படம்: CNA/Syamil Sapari

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஆசியான் Hyundai கிண்ணக் காற்பந்துப் போட்டியில் சிங்கப்பூரும் தாய்லந்தும் பொருதும் முதற்கட்ட அரையிறுதி ஆட்டத்திற்கு அனைத்து நுழைவுச் சீட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.

சில நுழைவுச்சீட்டுகள் இணைய விற்பனைத் தளங்களில் மறுவிற்பனைக்கு வந்துள்ளன.

49 வெள்ளிக்கு விற்கப்பட்ட சீட்டுகள் 1,500 வெள்ளி வரை விலைபோகின்றன.

காலை 11 மணிக்கு Tickethotline இணையப்பக்கத்தில் நுழைவுச்சீட்டுகள் விற்பனைக்கு வந்தன.

ஏழே நிமிடத்தில் அனைத்தும் விற்றுத்தீர்ந்ததாக ரசிகர்கள் கூறினர்.

ஒரு மணி நேரத்தில் சுமார் 10 நுழைவுச்சீட்டுகள் Carousell இணையத்தளத்தில் விளம்பரம் செய்யப்பட்டன.

வரும் சனிக்கிழமை இரவு ஒன்பது மணிக்கு ஜாலான் புசார் விளையாட்டரங்கில் சிங்கப்பூர் - தாய்லந்து ஆட்டம் நடைபெறும்.

அதற்கான நுழைவுச்சீட்டுகள் தேவை என்று சுமார் 20 பேர் Carousell தளத்தில் விளம்பரம் செய்துள்ளனர்.

ஆசியான் Hyundai கிண்ணப் போட்டியை mewatch தளத்தில் நேரடியாகக் காணலாம்.
 
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்