Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

சிங்கப்பூரின் ஜேசன் தே 'தாய்லந்து மாஸ்டர்ஸ் பேட்மின்ட்டன்' போட்டியில் வெற்றி

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் ஜேசன் தே 'தாய்லந்து மாஸ்டர்ஸ் பேட்மின்ட்டன்' போட்டியில் வெற்றி

Singapore Badminton Association

தாய்லந்து மாஸ்டர்ஸ் பேட்மின்ட்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சிங்கப்பூரின் ஜேசன் தே (Jason Teh) வெற்றி பெற்றுள்ளார்.

பேங்காக்கில் உள்ள நிமிபுடர் அரங்கில் (Nimibutr Stadium) நடைபெற்ற இறுதிப்போட்டியில் அவர் சீனாவின் வாங் ஸெங் சிங்குடன் (Wang Zheng Xing) மோதினார்.

தே இரண்டுக்கு ஒன்று எனும் ஆட்டக் கணக்கில் வென்றார். செட் விவரம் 21-18, 15-21, 21-19.

அவர் முதல் முறையாக வெற்றிபெற்ற ஆகப் பெரிய போட்டி அது.

கடந்த மாதம் (ஜனவரி) இந்தோனேசிய மாஸ்ட்டர்ஸ் போட்டியில் ஜப்பானின் கோடாய் நாரௌகாவை (Kodai Naraoka) வெற்றிகண்ட தே காலிறுதிச் சுற்று வரை முன்னேறினார். 

அவர் சென்ற ஆண்டு (2024) 5 போட்டிகளில் இறுதிச் சுற்றில் பங்கேற்றார்.

தே உலகத் தரவரிசையில் 30ஆம் இடத்தில் உள்ளார்.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்