Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் - Boccia போட்டியில் சிங்கப்பூரின் ஜெரலின் டானுக்கு வெள்ளிப் பதக்கம்

வாசிப்புநேரம் -
உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் - Boccia போட்டியில் சிங்கப்பூரின் ஜெரலின் டானுக்கு வெள்ளிப் பதக்கம்

(படம்: SNPC/Goh Si Wei)

பாரிஸில் நடைபெறும் உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டியில் சிங்கப்பூரின் ஜெரலின் டான் (Jerayn Tan) போச்சா (Boccia) எனும் ஒரு வகை உருட்டுப்பந்து விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

அந்த விளையாட்டில் சிங்கப்பூர் பெற்றுள்ள முதல் பதக்கத்தை 35 வயது டான் வென்றிருக்கிறார்.

பிரான்ஸின் ஒரேலி ஓபெர்ட் (Aurelie Aubert) தங்கப் பதக்கத்தை வென்றார்.

சிங்கப்பூரில் உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பதக்கத்தை வென்று தந்த நான்காவது வீரர் என்ற பெருமை டானைச் சேரும்.

2008ஆம் ஆண்டில் Cerebral Palsy Alliance Singapore பள்ளியில் பயிலும்போது அந்த விளையாட்டில் ஈடுபட ஆரம்பித்தார் டான்.

ஆசியான் உடற்குறையுள்ளோருக்கான போட்டிகள், உலகப் போட்டிகளில் அவர் பங்கெடுத்துள்ளார்.

சென்ற ஆண்டு ஆசியான் உடற்குறையுள்ளோருக்கான போட்டிகளில் டான் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்