Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

காமன்வெல்த் விளையாட்டுகளின் பூப்பந்துப் போட்டி - காலிறுதிச் சுற்றில் வெளியேறினார் லோ கியென் இயூ

வாசிப்புநேரம் -
காமன்வெல்த் விளையாட்டுகளின் பூப்பந்துப் போட்டி -  காலிறுதிச் சுற்றில் வெளியேறினார் லோ கியென் இயூ

(படம்: AP Photo/Rui Vieira)

காமன்வெல்த் விளையாட்டுகளின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பூப்பந்துப் போட்டியின் காலிறுதிச் சுற்றில் சிங்கப்பூரின் முதல்நிலை ஆட்டக்காரர் லோ கியென் இயூ (Loh Kean Yew) தோல்வி கண்டார். 

அவர் 2-1 என்ற புள்ளிக்கணக்கில் மலேசியாவின் எங் ஸி யொங்கிடம் (Ng Tze Yong) தோற்றார். 

லோ இம்மாதப் பிற்பகுதியில் நடைபெறும் உலக வெற்றியாளர் (BWF) போட்டியில் கவனத்தைச் செலுத்துவார். 

சென்ற ஆண்டு அவர் அந்தப் போட்டியில் வெற்றி பெற்றார்.

பூப்பந்து உலக வெற்றியாளர் போட்டி வரும் 21ஆம் தேதி தோக்கியோவில் நடைபெறும். 

போட்டி ஒரு வாரம் நடக்கும்.

பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் 2022 போட்டிகளை meWATCH தளத்தில் நேரடியாகக் காணலாம். www.mewatch.sg/cwg2022 எனும் தளத்தில் பதிவு செய்துகொள்ளுங்கள்!

பார்க்கத் தவறிய விளையாட்டுகளின் முக்கியத் தருணங்களை YouTube தளத்தின் Mediacorp Entertainment வழி கண்டுரசிக்கலாம்!

ஆதாரம் : CNA/fh(gs)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்