Skip to main content
காமன்வெல்த் போட்டி: 200 மீட்டரில் சாந்திக்கு 8ஆம் இடம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

காமன்வெல்த் போட்டி: 200 மீட்டரில் சாந்திக்கு 8ஆம் இடம்

வாசிப்புநேரம் -
காமன்வெல்த் போட்டி: 200 மீட்டரில் சாந்திக்கு 8ஆம் இடம்

படம்: TeamSG/Lim Weixiang

வெளியீடு : 01 Aug 2026 09:41AM புதுப்பிப்பு : 01 Aug 2026 12:06PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

காமன்வெல்த் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிச் சுற்றில் சிங்கப்பூரின் சாந்தி பெரேரா எட்டாம் நிலையைப் பிடித்துள்ளார்.

அவர் எடுத்துக்கொண்ட நேரம் 23.21 விநாடிகள்.

போட்டியில் வென்றவர் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளைச் சேர்ந்த அடேஜா ஹாட்ஜ் (Adaejah Hodge).

தங்கப்பதக்கத்தைக் கைப்பற்ற அவர் எடுத்துக்கொண்ட நேரம் 22.07 விநாடிகள்.

கடந்த வியாழக்கிழமை (ஜூலை 30) சாந்தி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

காமன்வெல்த் போட்டியில் தனிநபர் ஓட்டத்தின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் சிங்கப்பூரர் என்ற பெருமை அவரைச் சேரும்.

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் அரையிறுதிச் சுற்றிலும் சாந்தி கலமிறங்கினார்.

அதில் அவர் 5ஆம் இடத்தைப் பிடித்தார். இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறத் தவறினார்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்