Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

கத்தார் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் சொன் ஹியோங் மின் விளையாடுவது பின்னர் உறுதிசெய்யப்படும்

வாசிப்புநேரம் -
கத்தார் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் சொன் ஹியோங் மின் விளையாடுவது பின்னர் உறுதிசெய்யப்படும்

(படம்: Facebook\Son Heung-min)

கத்தார் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கான தென்கொரிய தேசிய அணியில் சொன் ஹியோங் மின் (Son Heung-min) சேர்க்கப்பட்டுள்ளார்.

முகத்தில் படுகாயமடைந்துள்ள அவர் போட்டியில் பங்கேற்பது இன்னும் உறுதியாகவில்லை.

தென்கொரியத் தேசிய அணித் தலைவரான சொன் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்ஸ் (Tottenham Hotspur) அணிக்காக வெற்றியாளர் லீக் கிண்ண ஆட்டத்தில் விளையாடியபோது இடது கண்ணருகே காயமுற்றார். அதற்காக அவர் அறுவைச் சிசிச்சையும் மேற்கொண்டார்.

சொன்னின் நிலவரத்தைக் கண்டறிய டோட்டன்ஹாம் அணி மருத்துவத்துறையுடன் தொடர்பில் இருப்பதாகத் தென்கொரியத் தேசிய அணிப் பயிற்றுவிப்பாளர் பவுலோ பெந்தோ (Paulo Bento) கூறினார்.

சொன்னின் நிலவரத்தை அவ்வப்போது கண்காணிக்க வேண்டியிருப்பதாக பெந்தோ கூறினார்.

சொன் குணமடைவதுதான் இப்போதைக்கு முக்கியம். அதன்பிறகு இறுதி முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.

கத்தாரில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கான தமது அணி விளையாட்டாளர்கள் பட்டியலை வெளியிட்டபோது பெந்தோ இதனைத் தெரிவித்தார்.

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி நவம்பர் 20ஆம் தேதி தொடங்குகிறது.

தென்கொரியா நவம்பர் 24ஆம் தேதி அதன் தொடக்க ஆட்டத்தில் உருகுவேயுடன் (Uruguay) களமிறங்கவுள்ளது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்