உலகக் கிண்ணத்தை வென்றது ஸ்பெயின்!
வாசிப்புநேரம் -
படம்: Reuters/Dylan Martinez
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ஸ்பெயின் வாகை சூடியது.
2010க்குப் பிறகு இரண்டாம் முறையாக ஸ்பெயின் வென்றுள்ளது.
விறுவிறுப்பான முதல் பாதி கோல் இன்றி முடிவுக்கு வந்தது.
இரண்டாம் பாதியிலும் பரபரப்புக்குப் பஞ்சமில்லை.
அர்ஜென்ட்டினாவின் என்சோ பெர்னாண்டஸுக்குச் (Enzo Fernández) சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டது.
Free Kick வாய்ப்பை லமீன் யமால் (Lamine Yamal) கோலாக மாற்றத் தவறினார்.
90 நிமிடங்கள் கழித்தும் கோல் ஏதுமில்லை.
உலகக் கிண்ண இறுதிச்சுற்றில் இப்படி நடப்பது இது நான்காம் முறை.
இரண்டாம் பாதியின் முடிவில் 15 நிமிடக் கூடுதல் நேரம் வழங்கியும் பயனில்லை.
ஸ்பெயினின் நிகோ வில்லியம்ஸ் (Nico Williams) கோல்
போட்டதாகத் தோன்றியது.
ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திளைக்கும் முன்பு கோல் செல்லாது என்று நடுவர் (Referee) தீர்மானித்தார்.
மீண்டும் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது.
கண் இமைக்கும் நேரத்தில் ஸ்பெயினின் ஃபெர்ரான் டோரஸ் (Ferran Torres) கோலைப் புகுத்தினார்.
அர்ஜென்ட்டினாவால் இறுதிவரை ஆட்டத்தைச் சமப்படுத்த முடியவில்லை.
ஸ்பெயின் வெற்றிக் களிப்பில் திளைக்கிறது.

ஆதாரம் : AP