Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

AFF Suzuki கிண்ணம்: இந்தோனேசிய விளையாட்டாளர்கள் நால்வர் விதிமீறல் - இறுதிப் போட்டியில் பங்கேற்கத் தடை

AFF Suzuki கிண்ணக் காற்பந்து போட்டிக்காகச் சிங்கப்பூர் வந்துள்ள இந்தோனேசிய விளையாட்டாளர்கள் நால்வர் விதிகளை மீறியதை அடுத்து, இன்றிரவு நடைபெறவுள்ள இரண்டாம் சுற்று இறுதிப் போட்டியில் பங்கேற்க அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

போட்டியில் கலந்துகொள்ளும் குழுக்களும் அதிகாரிகளும் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கென நிர்ணயிக்கப்பட்ட ஹோட்டல்கள், பயிற்சி வளாகங்கள், போட்டி நடைபெறும் இடங்கள் ஆகியவற்றுக்குச் செல்ல மட்டுமே அவர்களுக்கு அனுமதி உண்டு.

அவை, விளையாட்டாளர்கள், அதிகாரிகள், சமூகத்தினர் ஆகியோரின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான முக்கியமான நடவடிக்கைகள் என SportSG கூறியது.

ஆனால், இந்தோனேசியாவைச் சேர்ந்த 4 விளையாட்டாளர்கள் 2 மணி நேரம்வரை தங்களது ஹோட்டலிலிருந்து வெளியே சென்றிருந்தது தெரிய வந்துள்ளது.

அதனால், அவர்கள் இன்றிரவு 8.30 மணிக்கு நடைபெறவுள்ள இரண்டாம் சுற்று இறுதிப் போட்டியில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அப்போட்டியில், இந்தோனேசியா தாய்லந்தைச் சந்திக்கின்றது.

-CNA/lk(gs)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்