சுவீடனுக்கு அதிர்ச்சி
வாசிப்புநேரம் -
படம்: Paul ELLIS / AFP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சுவீடன் அணியின் தற்காப்பு வீரர் இசாக் ஹியென் (Isak Hien) உலகக்கிண்ண போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.
ஜப்பானுக்கு எதிரான போட்டியில் அவருக்குத் தொடையில் காயம் ஏற்பட்டது.
அந்தப் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
அவர் காயமுற்றதை சுவீடன் காற்பந்துச் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
சிறந்த எட்டு மூன்றாம் இட அணிகளில் ஒன்றாக முன்னேறிய சுவீடன் 32 அணிகள் சுற்றில் பிரான்ஸை எதிர்கொள்கிறது.
ஆனால் 27 வயது ஹியென் அந்தப் போட்டியில் விளையாட மாட்டார்.
ஹியென் விரைவில் குணமடைய அணியின் முழு ஆதரவும் இருக்கும் என்று பயிற்சியாளர் கிரஹாம் பாட்டர் (Graham Potter) தெரிவித்தார்.
"காயம் காரணமாக உலகக்கிண்ணத்தை இவ்வாறு முடிக்க வேண்டியிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. அவருக்கு எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வோம்," என்றார் அவர்.
"இது அவருக்கு வேதனையான தருணம். ஆனால், அவர் இன்னும் வலிமையாக மீண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது," என்றும் பாட்டர் கூறினார்.

ஆதாரம் : Reuters