Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

"நீச்சல் வீரர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை அனைத்துலக விளையாட்டுத் தரநிலைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது"

வாசிப்புநேரம் -
"நீச்சல் வீரர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை அனைத்துலக விளையாட்டுத் தரநிலைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது"

(கோப்புப் படம்: AFP/Andy Buchanan, Facebook/Team Singapore/SportSG, AP/Matt Slocum)

போதைப்பொருள் பயன்படுத்தியது குறித்து தேசிய நீச்சல் வீரர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை அனைத்துலக விளையாட்டுத் தரநிலைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

ஜோசப் ஸ்கூலிங் (Joseph Schooling), அமண்டா லிம் (Amanda Lim), தியொங் சென் வேய் (Teong Tzen Wei) ஆகியோருக்கான ஆதரவை 
ஒரு மாதத்திற்குத் தற்காலிகமாக நிறுத்திக்கொள்ளப்போவதாக Sport Singapore அண்மையில் தெரிவித்திருந்தது.

நிர்வாக அடிப்படையில் மறுஆய்வு மேற்கொள்ளப்பட்ட பிறகே அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அது கூறியது.

ஒழுங்கு நடவடிக்கையை எடுத்தபோது போதைப்பொருள் பயன்பாடு குறித்த சிங்கப்பூரின் நிலைப்பாடு, அனைத்துலக விளையாட்டுத் தரநிலைகள், விளையாட்டாளர்களுக்கும் SportSG அமைப்புக்கும் இடையிலான ஒப்பந்த மீறல் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டதாக SportSG சொன்னது.

கஞ்சா, போதைமிகு அபின் போன்ற போதைப்பொருள்களை போட்டிக்காலத்திற்கு அப்பால் உட்கொள்வது குறித்து WADA எனும் போதைப்பொருளுக்கு எதிரான உலக அமைப்பு, தடை ஏதும் விதிப்பதில்லை.

சம்பந்தப்பட்ட விளையாட்டாளர்கள் போதையர் மறுவாழ்வுத் திட்டத்தை நிறைவுசெய்தால் ஒரு மாதத் தடை விதிக்கப்படும் என்று SportSG கூறியது.

நீச்சல் வீரர்கள் மீதான தடை இம்மாதம் முதல் தேதி தொடங்கியது.

மூவரும் போட்டிக்காலத்திற்கு அப்பால் கஞ்சா உட்கொண்டதை அண்மையில் ஒப்புக்கொண்டனர்.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்