Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

காமன்வெல்த் விளையாட்டுகளில் சிங்கப்பூருக்கு 4-ஆவது தங்கப் பதக்கம்

வாசிப்புநேரம் -
காமன்வெல்த் விளையாட்டுகளில் சிங்கப்பூருக்கு 4-ஆவது தங்கப் பதக்கம்

AFP/Andy Buchanan

காமன்வெல்த் விளையாட்டுகளில் மேசைப்பந்துப் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் சிங்கப்பூர் தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

சிங்கப்பூரின் ஃபெங் தியென்வெய் (Feng Tianwei),
ஸெங் ஜியெயன் (Zeng Jian) அணி ஆஸ்திரேலிய அணியை 3-0 என்ற செட்களில் தோற்கடித்துத் தங்கத்தைக் கைப்பற்றியது. 

அது இவ்வாண்டுப் போட்டிகளில் சிங்கப்பூரின் 4-ஆவது தங்கப் பதக்கம்.

முன்னதாக பேட்மின்ட்டன் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் சிங்கப்பூர் இன்று தங்கப் பதக்கம் வென்றது.

காமன்வெல்த் விளையாட்டுகள் இன்றோடு நிறைவுக்கு வருகின்றன.

சிங்கப்பூர் வென்றுள்ள பதக்கங்கள்:

  • மொத்தம் - 12
  • தங்கம் - 4
  • வெள்ளி - 4
  • வெண்கலம் - 4
பிர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் 2022 போட்டிகளை meWATCH தளத்தில் நேரடியாகக் காணலாம். www.mewatch.sg/cwg2022 எனும் தளத்தில் பதிவு செய்துகொள்ளுங்கள!
பார்க்கத் தவறிய விளையாட்டுகளின் முக்கியத் தருணங்களை YouTube தளத்தின் Mediacorp Entertainment வழி கண்டு ரசிக்கலாம்!

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்