Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

டென்னிஸ் வீரர் ஜோக்கோவிச் இன்று ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற்றப்படலாம்

வாசிப்புநேரம் -
டென்னிஸ் வீரர் ஜோக்கோவிச் இன்று ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற்றப்படலாம்

படம்: AFP

டென்னிஸ் வீரர் நோவக் ஜோக்கோவிச், ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரைவிட்டு இன்று வெளியேறக்கூடும். 

ஆஸ்திரேலிய அரசாங்கம் இரண்டாவது முறை அவருடைய விசாவை ரத்து செய்வது எனத் தீர்மானித்தால், ஜோக்கோவிச் வெளியேற வேண்டியிருக்கும்.  

ஆஸ்திரேலியப் பொது விருதுப் போட்டி தொடங்க மூன்று நாள் இருக்கும் வேளையில், இன்று காலை அவர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். 

சென்ற வாரம் ஜோக்கோவிச்  மெல்பர்ன் சென்று சேர்ந்தார். மருத்துவக் காரணங்களை முன்வைத்துத் தமக்கு தடுப்பூசியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். 

ஆனால், அதை ஏற்றுக்கொள்ளமறுத்த குடிநுழைவு அதிகாரிகள் அவரது விசா அனுமதியை நிராகரித்துத் தடுப்புக்காவலில் தங்க வைத்தனர். 

ஆனால்,  ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்ற மேல்முறையீட்டில் அவருக்குச் சாதகமான முடிவு கிடைத்தது. எனவே, அவரை வெளியேற்ற வேண்டுமா என்பது அரசாங்கத்தின் முடிவைச் சார்ந்திருக்கிறது. 

ஒருவரது நடத்தையைக் காரணம்காட்டி, விசா அனுமதியை நிராகரிக்க, ஆஸ்திரேலிய அரசாங்கத்துக்கு உரிமையுண்டு. 

பயணப் படிவத்தில் ஜோக்கோவிச், ஆஸ்திரேலியா வருவதற்கு முந்திய 14 நாள்களுக்கு வேறு எங்கும் செல்லவில்லை என்று தவறாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவர் தாய்நாடு தவிர வேறு ஒரு நாட்டுக்குச் சென்றிருந்தார். 

ஆஸ்திரேலியாவில் தெளிவான எல்லைப் பாதுகாப்பு விதிகள் நடப்பிலிருப்பதாக நிதியமைச்சர் கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa