Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

"எரிக் டென் ஹாக் ஒரு சிறந்த பயிற்றுவிப்பாளர்"

வாசிப்புநேரம் -
பார்சலோனா காற்பந்துக் குழுவின் பயிற்றுவிப்பாளர் ஸாவி ஹெர்னாண்டஸ் (Xavi Hernandez) மென்செஸ்டர் யுனைட்டட் (Manchester United) அணியின் பயிற்றுவிப்பாளர் எரிக் டென் ஹாக்கைப் (Erik ten Hag) புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

மென்செஸ்ட்டர் யுனைட்டெட் அணியின் காற்பந்து நட்சத்திரம் மார்க்கஸ் ராஷ்ஃபோர்ட்டை (Marcus Rashford) ஐரோப்பாவின் ஆகச் சிறந்த விளையாட்டாளர்களில் ஒருவராக மாற்றியது எரிக் டென் ஹாக் என அவர் கூறினார்.

"எரிக் டென் ஹாக் ஒரு சிறந்த பயிற்றுவிப்பாளர். அவர் தலைமையில் அனைவரும் சிறப்பாக விளையாடுகின்றனர்," என்று ஸாவி சொன்னார்.

இதுவரை விளையாடிய 15 ஆட்டங்களில் 13 கோல்களை அடித்த பெருமை ராஷ்ஃபோர்ட்டைச் சேரும்.

மென்செஸ்ட்டர் யுனைட்டெட் அணியும் பார்சலோனா அணியும் நாளை (17 பிப்ரவரி) மோதவுள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்