Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

டென்னிஸ் பந்தில் தரமில்லை - உலக நட்சத்திரங்கள் குமுறல்

வாசிப்புநேரம் -
இத்தாலியின் டூரின் நகரில் நடைபெறும் ATP Finals போட்டியில், டென்னிஸ் பந்துகளை மாற்றும்படி நட்சத்திரங்கள் பலர் கோரியுள்ளனர்.

பந்துகளில் தரமில்லை என்று விளையாட்டாளர்கள் குமுறுகின்றனர்.

உலகத் தரவரிசையில் 4ஆம் இடத்தில் உள்ள விளையாட்டாளர் டேனியல் மெட்வெடேவ் (Daniil Medvedev) பந்துகள் மெதுவாகச் செல்வதாகக் கூறினார்.

கிருமித்தொற்றுச் சூழலுக்குப் பின் உற்பத்தியாளர்கள் செலவைக் குறைக்க முற்படுகின்றனர் என்றும் அவர்கள் பந்துகளுக்கு வேறு விதமான ரப்பரைப் பயன்படுத்துகின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

ATP போட்டியில் 2019ஆம் ஆண்டிலிருந்து ஜப்பானிய Dunlop பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

அவற்றை 2028ஆம் ஆண்டுவரை பயன்படுத்த ஒப்பந்தம் உண்டு.

உலகின் பெரும் டென்னிஸ் போட்டிகளில் கிட்டத்தட்டப் பாதி அத்தகைய பந்துகளைப் பயன்படுத்துவதாக ATP சொன்னது.

மற்ற போட்டிகளில் Wilson, Slazenger போன்ற நிறுவனங்களின் பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

வெவ்வேறு போட்டிகளில் வெவ்வேறு பந்துகளைப் பயன்படுத்துவது மிகவும் சிரமமாக இருப்பதாக விளையாட்டளர்கள் குறைகூறினர்.
ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்