Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

புதிய குடியுரிமை பெற்று விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவுள்ள ரஷ்ய விளையாட்டாளர்

வாசிப்புநேரம் -

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிலிருந்து ரஷ்ய விளையாட்டாளர்கள் தடைசெய்யப்பட்டிருப்பதால் ரஷ்ய டென்னிஸ் வீரர் ஒருவர் ஜார்ஜியா நாட்டின் குடியுரிமையைப் பெற்றுள்ளார்.

நடேலா சாலாமிட்ஸ் (Natela Dzalamidze) என்னும் அந்த 29 வயது இரட்டையர் பிரிவு டென்னிஸ் வீரர், உலகத் தரவரிசையில் 44ஆம் இடத்தில் உள்ளார். 

ஜூன் 27ஆம் தேதி தொடங்கவிருக்கும் பெண்கள் இரட்டையர் பிரிவுப் போட்டியில் செர்பியாவின் அலெக்ஸாண்ட்ரா க்ரூனிச்சிற்கு (Aleksandra Krunic) எதிராக விளையாடவிருக்கிறார் சாலாமிட்ஸ்.

உக்ரேனை ரஷ்யா தாக்கியதைத் தொடர்ந்து ரஷ்யா, பெலரூஸ் (Belarus) ஆகிய நாடுகளைச் சேர்ந்த விளையாட்டாளர்கள் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இருந்து தடைசெய்யப்படுவர் என்று விம்பிள்டன் ஏற்பாட்டாளரான All England Club ஏப்ரல் மாதத்தில் அறிவித்திருந்தது.

ஆனால் சாலாமிட்ஸ் புதுக் குடியுரிமை பெற்றதில் தலையிட முடியாது என்று All England Club-இன் பேச்சாளர் கூறினார். 

போட்டியில் கலந்துகொள்வதற்கான அனைத்துத் தேவைகளையும் சாலாமிட்ஸ் பூர்த்தி செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்