Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஆணாகப் பிறந்திருக்கக் கூடாதா? -மாதவிடாய் வயிற்றுவலியால் வெற்றியை இழந்த சீன டென்னிஸ் நட்சத்திரம்

வாசிப்புநேரம் -

சீனாவின் பிரபல டென்னிஸ் நட்சத்திரமான செங் குவின்வென் (Zheng Qinwien) மாதவிடாயின்போது ஏற்பட்ட வயிற்றுவலி தமது கனவுகளைச் சிதைத்துவிட்டதாக வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

பிரெஞ்சுப் பொது விருதுப் போட்டியில் உலகத் தரவரிசையில் முதல் நிலையிலுள்ள இகா சுவியாடெக்கிடம் (Iga Swiatek) அவர் தோல்விகண்டார்.

ஆணாகப் பிறந்திருக்கக்கூடாதா என்று வருந்தியதாகச் சொன்னார் 19 வயது செங்.

உலகத் தரவரிசையில் 74ஆவது இடத்தில் இருக்கும் செங்கிற்கு ஆட்டத்திற்கு இடையே மருத்துவ உதவி தேவைப்பட்டது. வலது காலில் அவருக்கு அடிபட்டிருந்தது.

ஆனால் அது ஒரு பொருட்டல்ல என்று கூறிய அவர், தமது மாதவிடாய் வலியைக் குறிப்பிட்டு, "இது பெண்களுக்குரிய வலி" என்றார்.

மாதவிடாயின் முதல் நாளன்று தமக்குக் கடுமையான வயிற்றுவலி ஏற்படுவதாகச் சொன்னார் அவர்.

போட்டியில் தற்போது வென்றிருக்கும் சுவியாடெக் அடுத்து, ஜெசிகா பெகுலாவுடன் (Jessica Pegula) மோதுவார்.

அந்த ஆட்டத்தைப் பொறுத்து அவர் அரையிறுதிக்குச் செல்வது உறுதியாகும்.
 

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்