இங்கிலாந்தின் முடிவு தவறு - உலகக்கிண்ண அரையிறுதி ஆட்டம் குறித்து டிரம்ப் விமர்சனம்
வாசிப்புநேரம் -
படம்: Mandel NGAN / AFP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அர்ஜென்ட்டினாவிடம் உலகக் கிண்ண அரையிறுதியில் இங்கிலாந்து தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அந்த அணியின் வியூகத்தை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) விமர்சித்துள்ளார்.
நியூயார்க்கில் ஃபிஃபா தலைவர் ஜியான்னி இன்பான்டினோவுடன் (Gianni Infantino) நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் (Harry Kane) குறித்துப் பேசினார்.
முன்னிலை பெற்ற பிறகு அணியின் சிறந்த வீரரான ஹாரி கேனை தற்காப்பு ஆட்டத்தில் ஈடுபடுத்தியது தவறு என்று டிரம்ப் கூறினார்.
"நான் காற்பந்து பயிற்றுவிப்பாளர் அல்லர். இருந்தாலும், கொஞ்சம் தாக்குதல் ஆட்டத்திலும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்," என்றார் அவர்.
அரையிறுதி ஆட்டத்தில், பயிற்றுவிப்பாளர் தோமஸ் துசெல் (Thomas Tuchel) இரு தாக்குதல் வீரர்களை வெளியேற்றி தற்காப்பு வீரர்களைக் களமிறக்கியது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
அந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்ட லியோனல் மெஸ்சி (Lionel Messi) இரண்டு கோல்களுக்கு உதவினார்.
அர்ஜென்ட்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
எனினும் தாம் எடுத்த முடிவில் வருத்தம் இல்லை என்று துசெல் மீண்டும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : AFP