நேப்பாளப் பெருவெள்ளம்: UEFA மௌன அஞ்சலி
வாசிப்புநேரம் -
(படம்: Michal Cizek / AFP)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
நேப்பாளப் பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு UEFA வெற்றியாளர் லீக் கிண்ண ஆட்டத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
புதிய பருவம் அண்மையில் தொடங்கியது.
முதல் 6 ஆட்டங்களுக்கு முன்னர், ஆட்டக்காரர்கள் ‘You are not alone, Nepal’ என்ற பதாகைக்குப் பின்னால் நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.
இந்த வாரம் நடைபெறும் 18 ஆட்டங்களிலும் இதேபோன்று அஞ்சலி செலுத்தப்படும் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
ஆகஸ்ட் 26ஆம் தேதி நேப்பாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் நூற்றுக்கணக்கானோர் மாண்டனர்.
இன்னும் ஆயிரக்கணக்கானோரைக் காணவில்லை.
பேரிடருக்குப் பிறகு உலகம் முழுதும் பல விளையாட்டு அமைப்புகளும் குழுக்களும் நேப்பாளத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த வார ஆட்டங்களுக்குமுன் ஐரோப்பியக் காற்பந்துக் குடும்பம் ஒன்றிணைந்து நேப்பாள மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆதரவையும் தெரிவிக்கும் என்று UEFA தலைவர் அலெக்சாண்டர் செஃபெரின் (Aleksander Čeferin) கூறினார்.
பேரிடரிலிருந்து மீண்டுவர நேப்பாள மக்களுக்கு மனவலிமை கிடைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்குமுன், பிரிமியர் லீக் குழுவான ஆர்சனல் (Arsenal) நேப்பாள நிவாரணப் பணிகளுக்கு நன்கொடை வழங்க முன்வந்தது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, Save the Children அமைப்புடன் இணைந்து நிதி திரட்டும் முயற்சியிலும் ஆர்சனல் ஈடுபட்டுள்ளது.

ஆதாரம் : AFP