Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தாயான பின் வென்ற முதல் டென்னிஸ் கோப்பை... ரொக்கப் பரிசை உக்ரேனிய பிள்ளைகளுக்கு நன்கொடை செய்த வீராங்கனை

வாசிப்புநேரம் -
உக்ரேனின் டென்னிஸ் வீராங்கனை எலினா ஸ்விடோலினா (Elina Svitolina), தாம் தாயான பின் வென்ற முதல் போட்டியின் ரொக்கப் பரிசை தமது நாட்டுப் பிள்ளைகளுக்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.

28 வயது ஸ்விடோலினா ரஷ்யாவின் அன்னா பிளிங்கோவாவை (Anna Blinkova) வீழ்த்தி Internationaux de Strasbourg டென்னிஸ் போட்டியை வென்றுள்ளார்.

ஆட்டம் சுமார் ஒன்றரை மணிநேரம் மட்டுமே நீடித்ததாக BBC செய்தி நிறுவனம் சொன்னது.

சுமார் 7 மாதங்களுக்கு முன்பு தான் அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது.

போட்டியில் வென்ற ரொக்கப் பணமான 29,760 யூரோவை உக்ரேனியப் பிள்ளைகளுக்கு வழங்கப்போவதாக அவர் குறிப்பிட்டார்.

உலகத் தரவரிசையில் அவர் 508ஆவது இடத்தில் உள்ளார்.

சென்ற ஆண்டு ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்ததால் ஏற்பட்ட மனத்துயரத்தால் டென்னிஸ் விளையாடுவதிலிருந்து தற்காலிகமாக ஓய்வு எடுத்துக்கொள்ளப்போவதாக ஸ்விடோலினா கூறியிருந்தார்.

அதன் பின்னர் தாம் கர்ப்பமாக இருந்த செய்தியை அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்