Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

எதிர்காலத் தலைமுறைக் காற்பந்து நட்சத்திரங்களை உருவாக்க முனையும் திட்டம்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்க் காற்பந்துக் கழகம் அடுத்தத் தலைமுறைக் காற்பந்தாட்டக்காரர்களை உருவாக்க உயர்தரப் பயிற்றுவிப்பாளர்கள், விளையாட்டு அறிவியல் ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டத்தை அறிமுகம் செய்கிறது.

ஆண் பிள்ளைகள் மட்டுமே தற்போது பங்கேற்கும் திட்டத்தில் இனி பெண் பிள்ளைகளும் உடற்குறையுள்ளவர்களும் கலந்துகொள்ளலாம்.

Unleash The Roar என்று அந்தத் தேசியத் திட்டத்துக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

2034ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கு சிங்கப்பூர் தகுதிபெறுவது திட்டத்தின் இலக்கு.

ஸ்பானிய லீக்கான La Ligaவிலிருந்து வரும் வெளிநாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள், உள்ளூர்ப் பயிற்றுவிப்பாளர்கள் ஆகியோரிடம் இளையர்கள் பயிற்சி பெறுவர்.

அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக விளையாட்டு அறிவியலும் சேர்க்கப்படும்.

உயர்ந்லைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் திட்டத்தில் பங்கேற்கலாம்;
தேவை ஏற்பட்டால் அவர்களுக்குக் கல்வி ஆதரவும் வழங்கப்படும்.

தற்போது 10 பள்ளிகளைச் சேர்ந்த 300 மாணவர்கள் திட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இனி திட்டம் விரிவடைந்து 16 பள்ளிகளிலிருந்து 1,400 மாணவர்கள் பங்கேற்பர்.

ஆண்டிறுதிக்குள் அவர்களுக்கு வெளிநாட்டு உபகாரச் சம்பளத் திட்டங்களை வழங்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்