உலகக் கிண்ண ஏமாற்றம்: வெற்றியின்றி வெளியேறிய உருகுவே
படம்: CARL DE SOUZA / AFP
This audio is generated by an AI tool.
இருமுறை காற்பந்து உலகக் கிண்ணத்தை வென்றுள்ள உருகுவே, இம்முறை ஒரு வெற்றியைக்கூடப் பெறாமல் குழு சுற்றிலேயே வெளியேறியுள்ளது.
48 அணிகள் பங்கேற்று, 32 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் விரிவுபடுத்தப்பட்ட தொடரிலும் உருகுவே தகுதி பெறத் தவறியது பெரும் ஏமாற்றமாகக் கருதப்படுகிறது.
குழு H-இல், அதன் முதல் ஆட்டத்தில் சவூதி அரேபியாவுடன் 1-1 என்று சமநிலை கண்டது.
பின்னர் உலகக் கிண்ணத்தில் முதல் முறையாக விளையாடிய காபோ வெர்டே அணியுடன் 2-2 என்று சமநிலை கண்டது.
இன்று ஸ்பெயினுடன் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது உருகுவே.
புள்ளிகள் அடிப்படையில் குழுவில் இறுதி இடத்தைப் பிடித்தது.
2024 கோப்பா அமெரிக்காவில் மூன்றாவது இடம் பிடித்த அணியாக இருந்ததால், உருகுவே எளிதில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் எனப் பலரும் எதிர்பார்த்திருந்தனர்.
தொடர்ச்சியாக இரண்டாவது முறை உலகக் கிண்ணக் குழுச் சுற்றிலேயே வெளியேறியுள்ளது உருகுவே.
பயிற்றுவிப்பாளர் மார்செலோ பியெல்சா (Marcelo Bielsa) அணியில் தொடர்வாரா என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.