Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

அமெரிக்கப் பொது விருது - மகளிர் ஒற்றையர் பிரிவில் சபலெங்க்காவிற்கு வெற்றி

வாசிப்புநேரம் -
அமெரிக்கப் பொது விருது - மகளிர் ஒற்றையர் பிரிவில் சபலெங்க்காவிற்கு வெற்றி

(படம்: JAMIE SQUIRE / GETTY IMAGES NORTH AMERICA / AFP)

அமெரிக்கப் பொது விருது (US Open) டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதன்முறையாக அரினா சபலெங்க்கா (Aryna Sabalenka) வெற்றி பெற்றுள்ளார்.

பெலரூஸைச் சேர்ந்த 26 வயது சபலெங்க்கா, அமெரிக்கரான ஜெஸ்ஸிகா பெகுலாவை (Jessica Pegula) வீழ்த்தினார்.

செட் விவரம்: 7-5, 7-5

உலகத் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் சபலெங்க்கா அண்மையில் ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் போட்டியையும் வென்றார்.

வெற்றியை எண்ணி மிகவும் பெருமைப்படுவதாக சபலெங்க்கா கூறினார்.

அமெரிக்கப் பொது விருதை வெல்வது தமது கனவு என்றும் அவர் சொன்னார்.

சென்ற ஆண்டு (2023) அமெரிக்கப் பொது விருதுப் போட்டியின் இறுதிச்சுற்றில் சபலெங்க்கா வெற்றியை அமெரிக்காவின் கோகோ காஃபிடம் (Coco Gauff) தவறவிட்டார்.

நேற்று (7 செப்டம்பர்) நடைபெற்ற இறுதிச்சுற்றைக் காண 23,000 பேர் திரண்டிருந்தனர்.
ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்