ஓய்ந்தது ஓட்டம்; ஓயவில்லை உசேன் போல்ட்டின் ஏக்கம்
வாசிப்புநேரம் -
படம்: Attila KISBENEDEK / AFP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொள்வதைப் பற்றி நினைத்து ஏங்குவதாக ஓட்டவீரர் உசேன் போல்ட் (Usain Bolt) தெரிவித்துள்ளார்.
அரங்கிற்குள் நுழையும்போது கிடைக்கும் உற்சாகம், பரபரப்பு ஆகியவற்றை அவர் நினைப்பதாக கூறினார்.
40 வயதை எட்டும் போல்ட், மீண்டும் போட்டிக்குத் திரும்பும் திட்டம் இல்லை என்கிறார்.
அடுத்த தலைமுறை வீரர்களும் எதிர்கால வெற்றியாளர்களும் வளர்ச்சி அடைவதைப் பார்க்க விரும்புவதாகப் போல்ட் கூறினார்.
ஓய்வுபெற்ற பிறகும் போல்ட்டின் ரசிகர்கள் ஓயவில்லை.
விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள், ரசிகர்கள் எனப் பலர் அவரைச் சந்திக்கவும் அவருடன் படம் எடுத்துக்கொள்ளவும் ஆர்வம் காட்டுகின்றனர்.
2017ஆம் ஆண்டில் போல்ட் ஓய்வுபெற்றார்.
100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப் போட்டிகளுக்கான உலகச் சாதனைகள் இன்னமும் அவர் வசமே உள்ளன.
அவர் மொத்தம் 19 உலகளாவிய ஓட்டப்பந்தயப் பட்டங்களை வென்றுள்ளார்.
உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராகத் தாம் பேசப்படவேண்டும் என்பதே அவரது இலக்காக இருந்ததாக அவர் கூறியிருந்தார்.

ஆதாரம் : AFP