பல ஆண்டுகள் கழித்து டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த விராட் கோஹ்லி!
வாசிப்புநேரம் -

(படம்: Punit PARANJPE / AFP)
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லி (Virat Kohli) 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் அவரது முதல் சதத்தை அடித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அவர் அடித்துள்ள 28ஆவது சதம் அது.
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பொருதிய ஆட்டத்தில் அவர் சிறப்பாக விளையாடியதாக Hindustan Times நாளேடு கூறியது.
உணர்ச்சிவசப்பட்ட விராட் தமது தங்கச் சங்கிலியில் உள்ள பதக்கத்துக்கு முத்தமிட்டார்.
அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்ததாக Hindustan Times நாளேடு தெரிவித்தது.
தற்போது இந்தியா 2-1 என்னும் கணக்கில் முன்னிலையில் உள்ளது.
2021இலும் 2022இலும் சிறப்பாக விளையாடாத காரணத்தினால் அவர் அணித் தலைவர் பொறுப்பை இழந்தார்.