Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

காற்பந்தில் திறனாளர்களை உருவாக்க இளம் வயதிலேயே பயிற்சி வழங்கவேண்டும்: லிவர்ப்பூல் ஆட்டக்காரர்

வாசிப்புநேரம் -

காற்பந்தில் திறனாளர்களை உருவாக்க இளம் வயதிலேயே பயிற்சி வழங்கவேண்டுமென முன்னாள் லிவர்ப்பூல் (Liverpool) ஆட்டக்காரரும் செக் குடியரசின் அனைத்துலக  விளையாட்டாளருமான விளாடிமிர் ஸ்மிட்சர் (Vladimir Smicer) ஆலோசனை கூறியுள்ளார். 

இளையர்கள்மீது கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். அவ்வாறு செய்வதன்மூலம் சிங்கப்பூர், செக் குடியரசு போன்ற சிறிய நாடுகள் காற்பந்தில் சிறந்து விளங்கமுடியும் என்றார் அவர். 

Premier League பருவத்துக்கு முந்திய ஆசியச் சுற்றுப்பயணத்தையொட்டி சிங்கப்பூருக்கு வந்துள்ள சில முன்னாள் ஆட்டக்காரர்களில் அவரும் ஒருவர். 

முன்னாள் லிவர்ப்பூல் ஆட்டக்காரர்கள் இயன் ரஷ், செமி ஹைப்பியா இருவரும் வசதிகுறைந்த குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 30 சிறாருக்குப் பயிற்சி வழங்கினர்.

2009ஆம் ஆண்டுக்குப் பிறகு லிவர்ப்பூல் ஆட்டக்காரர்கள் மீண்டும் சிங்கப்பூருக்கு வந்துள்ளனர். 

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்