Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

"மென்செஸ்ட்டர் யுனைட்டட் Champions லீக்கிற்குச் சொந்தமானது" - அணித் தலைவர் டென் ஹாக்

வாசிப்புநேரம் -
"மென்செஸ்ட்டர் யுனைட்டட் Champions லீக்கிற்குச்  சொந்தமானது" - அணித் தலைவர் டென் ஹாக்

(படம்: AFP)

அடுத்த பருவத்துக்கான Champions லீக்கிற்குத் தகுதி பெற்றுள்ள மென்செஸ்ட்டர் யுனைட்டட் (Manchester United) இங்கிலீஷ் பிரிமியர் லீக் புள்ளிப் பட்டியலில் 3ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Old Trafford அரங்கில் நடைபெற்ற இங்கிலீஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் யுனைட்டட் 4-1 என்ற கோல்கணக்கில் செல்ஸியை (Chelsea) வீழ்த்தியது.

ஆட்டத்தில் யுனைட்டட்டுக்குக் கசிமிரோ (Casemiro), ஆன்ட்டனி மார்ஸியால் (Anthony Martial), புருனோ பெர்னாண்டஸ் (Bruno Fernandes), மார்க்கஸ் ரெஷ்பர்ட் (Marcus Rashford) ஆகியோர் கோலடித்தனர்.

யுனைட்டட்டின் வெற்றியைக் கொண்டாடிய அணித் தலைவர் எரிக் டென் ஹாக் (Erik ten Hag) "இந்த அணி Champions லீக்குக்குச் சொந்தமானது" என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

இப்பருவ பிரிமியர் லீக்கில் யுனைட்டட்டுக்கு இன்னும் ஓர் ஆட்டம் எஞ்சியுள்ளது.

3ஆம் இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள கடைசி ஆட்டத்தில் யுனைட்டட் கட்டாய வெற்றிக்காகப் போராட வேண்டும்.

யுனைடட்டின் 3ஆம் இடம் நிலைக்குமா அல்லது தற்போது 4ஆம் இடத்திலுள்ள நியூகாஸல் (Newcastle) அதனைத் தட்டிப் பறிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- BBC Sports

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்