Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

உலகக் கிண்ணம்: ரசிகர்கள் பெரும்பாலும் இலவசமாகப் பார்க்கின்றனர்

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணம்: ரசிகர்கள் பெரும்பாலும் இலவசமாகப் பார்க்கின்றனர்

படம்: Reuters

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளைப் பெரும்பாலோர் இலவசமாகவே பார்க்கின்றனர்.

சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கம் (CASE) 700 பேரிடம் நடத்திய கருத்தாய்வில் அது தெரியவந்தது.

சங்கத்தின் தலைவர் மெல்வின் யோங் (Melvin Yong) கருத்தாய்வின் முடிவுகளை Facebookஇல் பகிர்ந்தார்.

உலகக் கிண்ணப் போட்டியை எவ்வளவு பேர் பார்க்கிறார்கள்?

பார்ப்பதில்லை - 29%
ஆட்டத்தின் முக்கியத் தருணங்களின் தொகுப்பு மட்டும் (highlights) - 39%
சில ஆட்டங்கள் - 26%
பெரும்பாலான ஆட்டங்கள் - 6%

உலகக் கிண்ண ஆட்டங்களை மக்கள் எப்படிப் பார்க்கின்றனர்?

இலவசமாக - 45 %
சந்தா செலுத்தி - 5%
இணையத் தொகுப்புகள் வழி - 22%
பார்ப்பதில்லை - 28%

மீடியாகார்ப்பின் இலவச ஒளிபரப்பு, ஆட்டத்தின் முக்கிய தருணங்களைக் காட்டும் காணொளிகள் மூலம் பெரும்பாலோர் பயனடைந்திருப்பதைக் கருத்தாய்வு காட்டுவதாகத் திரு யோங் சொன்னார்.

மீடியாகார்ப் 28 ஆட்டங்களை இலவசமாக ஒளிபரப்புகிறது.

அரையிறுதி, இறுதி ஆட்டங்களும் அவற்றில் அடங்கும்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்