Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி 2026 எங்கு நடைபெறவுள்ளது?

வாசிப்புநேரம் -

கத்தாரில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் பரவசமாக நடைபெற்று வருகின்றன.

அடுத்ததாக 2026ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி நடைபெறும்.

அது எங்கே என்று தெரியுமா?

- அமெரிக்கா, கனடா, மெக்சிகோ

முதல்முறையாக உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை 3 நாடுகள் சேர்ந்து ஏற்று நடத்தவுள்ளன.

எந்தெந்த நகரங்களில் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன?

- அமெரிக்காவில்: சியேட்டல், சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சலிஸ், கன்சாஸ் சிட்டி, டாலஸ், அட்லாண்ட்டா, ஹியூஸ்டன், போஸ்ட்டன், பிலடெல்ஃபியா, மயாமி, நியூயார்க்/நியூ ஜெர்சி

- மெக்சிகோவில்: மெக்சிகோ சிட்டி, குவாடலஜாரா, மான்ட்டெரி

- கனடாவில்: வான்கூவர், டொரோண்டோ

எப்போது?

- போட்டிகளுக்கான தேதியை FIFA இன்னும் அறிவிக்கவில்லை.

- மீண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறும்.


எத்தனை அணிகள்?

- முதல்முறையாக 48 அணிகள் பங்கெடுக்கவுள்ளன.

- தற்போது கத்தாரில் நடைபெறும் போட்டிகளில் 32 அணிகள் கலந்துகொள்கின்றன.

3 நாடுகளும் இதற்கு முன்பு உலகக் கிண்ணத்தை ஏற்று நடத்தியிருக்கின்றனவா?

- 1970, 1986 ஆகிய ஆண்டுகளில் மெக்சிகோவில் 

- அது உலகக் கிண்ணத்தை 3ஆவது முறை ஏற்று நடத்தவுள்ள முதல் நாடாக இருக்கும்.

- 1994ஆம் ஆண்டில் அமெரிக்காவில்

- கனடாவில் ஆண்களுக்கான உலகக் கிண்ணம் இதுவரை நடந்ததில்லை.


2026இல் உலகக் கிண்ணத்தை ஏற்று நடத்தப் போட்டியிட்ட மற்ற நாடுகள்?

- மொரோக்கோ

அது உலகக் கிண்ணத்தை ஏற்று நடத்த 5ஆவது முறையாகப் போட்டியிட்டுத் தோல்வி கண்டது.

அமெரிக்கா - மெக்சிகோ - கனடா கூட்டணிக்கு 134 வாக்குகளும் மொரோக்கோவிற்கு 65 வாக்குகளும் கிடைத்தன.

- Reuters
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்