Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு செய்தியில் மட்டும்

உலகக் கிண்ணக் காற்பந்து - கிண்ணத்தைத் தட்டிச் செல்லும் வாய்ப்பு எந்தெந்தக் குழுக்களுக்கு அதிகம்?

வாசிப்புநேரம் -

காற்பந்து ஆட்டங்களை வழக்கமாகப் பார்க்காதவர்களுக்குக் கூட உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் மீது ஒரு தனி ஆர்வம்... ஈர்ப்பு...

அனைவரின் மனத்திலும் ஒரே கேள்வி தான்...

இம்முறை உலகக் கிண்ணத்தை வெல்லப்போகும் நாடு எது?

அதற்கான உறுதியான பதில் என்னவோ அடுத்த மாதம் 18ஆம் தேதி இறுதி ஆட்டம் நிறைவடைந்த பின்பு தான் தெரியும்.

ஆனால் கிண்ணத்தைத் தட்டிச் செல்வதற்கான வாய்ப்புகள் எந்தக் குழுக்களுக்கு அதிகம்?

சிறப்பாக விளையாடக்கூடிய விளையாட்டாளர்கள் யார்யார்...

'செய்தி'யிடம் பகிர்ந்துகொண்டார்  சிங்கப்பூரின் முன்னாள் காற்பந்து வீரர் S. சுப்ரமணி.

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி 2022இல் வெற்றி பெறும் சாத்தியம் எந்தக் குழுக்களுக்கு அதிகம்?

"பிரேசில். அவர்கள் உலகக் கிண்ணத்திற்காகச் சிறப்பான விளையாட்டாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். பிரேசிலைச் சேர்ந்த விளையாட்டாளர்கள் வெவ்வேறு போட்டிகளில் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர்."

சிறப்பாக விளையாடக்கூடிய விளையாட்டாளர்கள் யார்?

"பிரான்ஸைச் சேர்ந்த எம்பாப்பே (Mbappe). இங்கிலாந்தைச் சேர்ந்த ஹேரி கேன் (Harry Kane)."

முற்றிலும் எதிர்பாராமல் நன்கு விளையாடக்கூடிய குழுக்கள்?

"இங்கிலாந்து, ஹாலந்து, குரோஷியா, போர்ச்சுகல் ஆகிய குழுக்கள் எதிர்பார்ப்புகளை மிஞ்சி நன்கு தேர்ச்சி அடைய வாய்ப்புகள் உண்டு."

நட்சத்திர விளையாட்டாளர்கள் ரொனால்டோ, மெஸ்ஸி... இம்முறை அவர்களின் நிலை?

"இதுவே உலகக் கிண்ணத்தை வெல்வதற்கான அவர்களின் இறுதி வாய்ப்பாக இருக்கக்கூடும். மெஸ்ஸி நன்கு விளையாட வாய்ப்புகள் உண்டு. அர்ஜெண்டினாவும் வலுவான அணி."

"ரொனால்டோ எப்படி விளையாடுவார் என்பதைச் சரியாக யூகிக்க முடியவில்லை. அவர் தற்போது உள்ள Manchester United அணியில் உள்ள பிரச்சினை அவர் விளையாட்டைப் பாதிக்கலாம்."

கத்தாருக்கு எதிரான குறைகூறல்கள்... போட்டியைப் பாதிக்குமா?

"பாதிக்காமல் இருந்தால் நல்லது. ரசிகர்கள் நல்ல போட்டியை எதிர்பார்க்கின்றனர். நிறைய பணம் செலவிடப்பட்டுள்ளது."

"அதனால் விளையாட்டில் மட்டும் கவனம் இருந்தால் சிறப்பு."
 

'FIFA உலகக் கிண்ணம் கத்தார் 2022' - 64 ஆட்டங்களையும் meWATCH தளத்தில் நேரலையில் கண்டுரசிக்கலாம். 

சந்தா, விளையாட்டுகள் குறித்த மேல் விவரங்கள் - mewatch.sg/fifaworldcup

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்