அரங்கைச் சுற்றி 1,000 வானூர்திகள்; தடுத்தது அமெரிக்கா
வாசிப்புநேரம் -
(படம்: REUTERS/Brian Snyder)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்காவில் காற்பந்து அரங்கங்களுக்கு அருகே 1,000க்கும் மேற்பட்ட ஆளில்லா வானூர்திகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை கூறியிருக்கிறது.
அவற்றில் 300க்கும் மேற்பட்ட வானூர்திகளை அதிகாரிகள் செயலிழக்கச் செய்ததாகக் கூறினார்.
இதுவரை 500க்கும் ஆதிகமான வானூர்திகளை அமெரிக்க மத்தியப் புலனாய்வுப் பிரிவு பறிமுதல் செய்தது.
அமெரிக்கா உலகக் கிண்ணப் போட்டிகளை மெக்சிகோ, கனடாவுடன் இணைந்து நடத்துகிறது. பாதுகாப்புக்கு அது அதிக முக்கியத்துவம் கொடுத்துவருகிறது.
அதற்காக சுமார் 100 மில்லியன் டாலரை (129 மில்லியன் வெள்ளி) ஒதுக்கியுள்ளது.
வானூர்திகளைத் தடுக்கவும், இடைமறிக்கவும் அதிகாரிகளுக்கு மேலும் அதிகமாகப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் (Donald Trump) 80வது பிறந்தநாளை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் சிறப்புக் கலப்புத் தற்காப்புக் கலைப் போட்டி நடந்தது.
அப்போது வானூர்திகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்படவிருந்தது.
அத்திட்டத்தை முறியடித்ததாகப் புலனாய்வுப் பிரிவு சொன்னது.

ஆதாரம் : AFP