Skip to main content
உலகக் கிண்ணக் காற்பந்து 2026
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

உலகக் கிண்ணக் காற்பந்து 2026 - ஆட்ட நுழைவுச்சீட்டுகளுக்கு 500 மில்லியன் கோரிக்கைகள்

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணக் காற்பந்து 2026 - ஆட்ட நுழைவுச்சீட்டுகளுக்கு 500 மில்லியன் கோரிக்கைகள்

(கோப்புப் படம்: AFP)

இந்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி ஆட்டங்களுக்கான நுழைவுச்சீட்டுகளை வாங்க சுமார் 500 மில்லியனுக்கும் மேற்பட்ட கோரிக்கைகள் கிடைத்துள்ளன.

அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் (FIFA) அந்தத் தகவலை அளித்தது.

211 நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களிடமிருந்து கோரிக்கைகளைப் பெற்றிருப்பதாய் அது கூறியது.

ஆட்டங்களின் நுழைவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்கும் கால அவகாசம் நேற்று முன் தினம் (13 ஜனவரி) நிறைவடைந்தது.

நுழைவுச்சீட்டுகள் கிடைத்தனவா என்பது அடுத்த மாதம் (பிப்ரவரி) 5ஆம் தேதிக்குள் ரசிகர்களுக்குத் தெரியப்படுத்தப்படும் என்று சம்மேளனம் குறிப்பிட்டது.

இம்முறை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை நடத்துகின்றன.

அந்த நாடுகளைத் தவிர்த்து ஜெர்மனி, இங்கிலாந்து, பிரேசில், ஸ்பெயின் ஆகிய நாடுகளிலிருந்து ஆக அதிகமான கோரிக்கைகள் வந்ததாகச் சம்மேளனம் தெரிவித்தது.

ஆக அதிகமான கோரிக்கைகள் பெற்ற ஆட்டம்? ஜூன் 27ஆம் தேதி கொலம்பியாவும் போர்ச்சுகலும் மோதும் ஆட்டம்.

இந்த ஆண்டு நடைபெறும் போட்டியின் நுழைவுச்சீட்டுகளின் விலை அளவுக்கு அதிகமாக இருப்பதாக குறைகூறப்படுகிறது.

2022ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற ஆட்டங்களுக்கான நுழைவுச்சீட்டு விலையைவிட அது சுமார் 5 மடங்கு அதிகமாக இருப்பதாக ஓர் அமைப்பு கூறியது.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்