உலகக் கிண்ணம் 2026 - வரலாறு படைத்த மகளிர் நடுவர்கள்
வாசிப்புநேரம் -
envato elements
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
உலகக் கிண்ணப் போட்டியில் செக் குடியரசும் தென்னாப்பிரிக்காவும் மோதிய ஆட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்கது.
ஆட்டத்தின் நடுவர்: டொரி பென்ஸொ (Tori Penso)
துணை நடுவர்கள்: புருக் மேயொ (Brooke Mayo), கேத்தரின் நெஸ்பிட் (Kathryn Nesbitt)
முதன்முறையாக அமெரிக்காவைச் சேர்ந்த மகளிர் மட்டும் முக்கிய நடுவர்களாக இருந்த உலகக் கிண்ண ஆட்டம் என்ற பெருமையை அந்த ஆட்டம் பெற்றது.
பென்ஸொவுக்கும் மேயொவுக்கும் அது முதல் உலகக் கிண்ண அனுபவமாக இருந்தது.
39 வயது பென்ஸொ நீண்ட காலமாக விளம்பரத் துறையில் பணியாற்றினார். 2017 முதல் முழு நேரக் காற்பந்தாட்ட நடுவராகப் பணியாற்றுகிறார்.
37 வயது மேயோ முன்னதாகப் பள்ளி ஆசிரியராகவும் பயிற்றுவிப்பாளருமாக இருந்தார். 2023இல் முழு நேர நடுவரானார்.
37 வயது நெஸ்பிட் 2022இல் கத்தாரில்
நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபெற்ற 6 பெண் நடுவர்களில் ஒருவராவார்.
முனைவர் பட்டம் பெற்ற அவர் ஈராண்டு பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்தார். பிறகு 2019இல் முழு நேர நடுவராக முடிவெடுத்தார்.
2022 உலகக் கிண்ணப் போட்டியில்தான் முதன்முறையாக மகளிர் மட்டுமே நடுவர்களாகக் கொண்ட ஆட்டம் அரங்கேறியது.
ஜெர்மனியும் கத்தாரும் மோதிய அந்த ஆட்டத்தில் பிரான்ஸின் ஸ்டெஃபானி ஃபிரப்பார் (Stéphanie Frappart) நடுவராக இருந்தார்.
துணை நடுவர்களாகப் பிரேசிலின் நெஸுவா பெக் (Nezua Back) மெக்சிகோவின் கேரன் டியாஸ் (Karen Díaz) ஆகியோர் பணியாற்றினர்.

ஆதாரம் : Others/Washington Post