கடைசி நிமிடத்தில் இரண்டு கோல்கள் - ஆஸ்திரியா, அல்ஜீரியா ஆட்டம் சமநிலை
வாசிப்புநேரம் -
படம்: REUTERS/Phil Noble
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஆஸ்திரியாவும் அல்ஜீரியாவும் பொருதிய ஆட்டம் 3-3 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
விறுவிறுப்பான ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெறும் என்பது கடைசி நிமிடம்வரை தெரியவில்லை.
ஆட்டத்தின் 28ஆவது நிமிடத்தில் ஆஸ்திரிய அணி அதன் முதல் கோலைப் போட்டது.
45ஆவது நிமிடத்தில் அல்ஜீரியாவுக்கு முதல் கோல்.
முற்பாதியில் 1-1 சமநிலை.
பிற்பாதியின் 55ஆவது நிமிடத்தில் ஆஸ்திரியா இரண்டாவது கோலை அடித்தது.
60ஆவது நிமிடத்தில் அல்ஜீரிய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரியாத் மாரெஸ் (Riyad Mahrez) இரண்டாவது கோலை அடித்தார்.
90 நிமிடங்கள் முடிந்த பிறகு கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
கூடுதல் நேரத்தின் ஆகக் கடைசி நிமிடத்தில் இரண்டு அணிகளுமே கோல்களை அடித்தன.
முதலில் அல்ஜீரியா அதன் மூன்றாவது கோலை அடித்தது. வெற்றி பெற்றுவிடலாம் என்று அல்ஜீரிய அணி மட்டுமல்ல ரசிகர்களும் நம்பினர்.
கூடுதல் நேரத்தின் 5ஆவது நிமிடத்தில் ஆஸ்திரிய அணியின் சாசா கலாய்ஜிச் (Sasa Kalajdzic) களமிறக்கப்பட்டார்.
கடைசி சில நொடிகளில் கலாய்ஜிச் ஆஸ்திரியாவின் மூன்றாவது கோலை அடித்து ஆட்டத்தைச் சமப்படுத்தினார்.
இதனால் இரு அணிகளும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

ஆதாரம் : Others