பெல்ஜியத்திடம் தோல்வி கண்ட அமெரிக்கா - போட்டியை நடத்தும் 3 நாடுகளும் வெளியேறிவிட்டன
வாசிப்புநேரம் -
படம்: Reuters
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
பெல்ஜியமும் அமெரிக்காவும் சந்தித்த ஆட்டத்தில் பெல்ஜியம் 4-1 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றிருக்கிறது.
ஆட்டத்தின் 9ஆவது நிமிடத்திலேயே பெல்ஜியம் முதல் கோலைப் போட்டது.
31ஆவது நிமிடத்தில் அமெரிக்கா அதன் முதல் கோலைப் போட்டு சமநிலைப்படுத்தியது.
ஆனால் இரண்டு நிமிடங்களில் பெல்ஜியம் அடுத்த கோலைப் புகுத்தியது.
பிற்பாதியில் பெல்ஜியத்துக்கு மூன்றாவது கோல்.
கூடுதல் நேரத்தில் பெல்ஜியம் 4ஆவது கோலைப் போட்டு போட்டியை முடித்தது.
காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறுகிறது பெல்ஜியம். அடுத்து அது ஸ்பெயினுடன் மோதவிருக்கிறது.
அமெரிக்கா போட்டியிலிருந்து வெளியேறுகிறது. இப்போது போட்டியை நடத்தும் மூன்று நாடுகளும் வெளியேறிவிட்டன.
இதற்கு முன்னர் நடந்த Knockout சுற்றில் அமெரிக்காவின் பாலரன் பேலகனுக்குச் (Folarin Balogun) சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டது.
பொதுவாகச் சிவப்பு அட்டை பெறும் விளையாட்டளர்கள் அடுத்த ஆட்டத்தில் விளையாடக் கூடாது.
அந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தலையிட்டார். FIFA தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவோடு (Gianni Infantino) தொலைபேசியில் பேசிய பிறகு FIFA சிவப்பு அட்டையை ரத்து செய்தது.
அதனால் பேலகன் இன்று விளையாடினார். ஆனால் இறுதியில் பலனொன்றும் இல்லை.
FIFAவின் முடிவை எதிர்த்து பல நாடுகளும் சம்மேளனங்களும் கண்டனம் தெரிவித்தன.

ஆதாரம் : Others