Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு trending

கண்கலங்கி நின்ற ஜப்பானின் தனாகா... ஆறுதல் சொன்ன பிரேசிலின் கூன்யா

வாசிப்புநேரம் -
கண்கலங்கி நின்ற ஜப்பானின் தனாகா... ஆறுதல் சொன்ன பிரேசிலின் கூன்யா

(படம்: Reuters/Phil Noble)

வெளியீடு : 30 Jun 2026 12:00PM புதுப்பிப்பு : 30 Jun 2026 12:27PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பிரேசில் உலகக் கிண்ணப் போட்டியின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியிருக்கிறது.

2-1 எனும் கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது பிரேசில்.

ஆட்டத்தில் பலரின் உள்ளத்தை உருகச் செய்த தருணம்?

ஜப்பானிய விளையாட்டாளர் ஆவோ தனாகாவிற்கு (Ao Tanaka) பிரேசிலிய விளையாட்டாளர் மத்தியூஸ் கூன்யா (Matheus Cunha) ஆறுதல் சொன்னது...
Related article image
(படம்: Reuters/Phil Noble)
Related article image
(படம்: Reuters/Phil Noble)
78ஆவது நிமிடத்தில் தான் தனாகா ஆட்டத்தில் நுழைந்தார்.

அதுவரை ஆட்டம் 1-1 எனச் சமநிலையில் இருந்தது.

94ஆவது நிமிடத்தில் தனாகா பந்தைத் தவறவிட்டார்.

பந்து பிரேசிலிடம் சென்றது. உடனே பிரேஸிலின் கேப்ரியல் மார்டினெல்லி (Gabriel Martinelli) கோல் அடித்துவிட்டார்.

பிரேசிலின் வெற்றி உறுதியானது.
Related article image
(படம்: Reuters/Phil Noble)
ஆட்டத்திற்குப் பிறகு தனாகா கண்கலங்கி நின்றுகொண்டிருந்தார்.

அதைக் கண்ட கூன்யா, தனாகாவைக் கட்டி அணைத்து ஆறுதல் கூறினார்.
Related article image
(படம்: Reuters/Phil Noble)
அந்தத் தருணம் சமூக ஊடகத்தில் பரவலாகப் பகிரப்படுகிறது.

எதிர் அணியில் இருந்தாலும் கூன்யாவின் அன்புமிக்கச் செயல் பலரின் கவனத்தை ஈர்த்தது.

இணையவாசிகள் பலரும் கூன்யாவைப் பாராட்டினர்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்