Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

இரண்டு முறை உலகக் கிண்ணத்தை வென்ற உருகுவேயைச் சமநிலைக்குக் கொண்டுவந்த காபோ வெர்ட்

வாசிப்புநேரம் -
இரண்டு முறை உலகக் கிண்ணத்தை வென்ற உருகுவேயைச் சமநிலைக்குக் கொண்டுவந்த காபோ வெர்ட்

படம்: REUTERS/Paul Childs

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் காபோ வெர்ட்டும் (Cabo Verde) உருகுவேயும் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

ஆட்டம் தொடங்கிய 21ஆவது நிமிடத்தில் காபோ வெர்ட் ஒரு கோலை அடித்தது.

அதைத் தொடர்ந்து இரண்டு கோல்களை ஒன்றன் பின் ஒன்றாக வலைக்குள் புகுத்தியது உருகுவே.

ஆட்டத்தின் 61ஆவது நிமிடத்தில் காபோ வெர்ட் அதன் இரண்டாவது கோலை அடித்தது.

இது Knockout சுற்றுக்குத் தகுதிபெறும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளதாகக் காபோ வேர்ட் கூறியது.

ஜூன் 27ஆம் தேதி சவுதி அரேபியாவுக்கு எதிராகக் காபோ வெர்ட் களமிறங்குகிறது.

உருகுவே ஸ்பெயினுடன் போட்டியிடும்.

இதுவரை உலகக் கிண்ணத்தில் இரண்டுமுறை வெற்றிபெற்றுள்ளது உருகுவே.

இம்முறை அடுத்த சுற்றுக்கு அது தகுதிபெறுமா என்ற ஐயம் எழுந்துள்ளதாகச் செய்தி ஊடகங்கள் கூறுகின்றன.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்