Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

ஆட்டத்தின் கடைசி விநாடிகளில் மூன்றாவது கோலைப் போட்ட கொலம்பியா

வாசிப்புநேரம் -
ஆட்டத்தின் கடைசி விநாடிகளில் மூன்றாவது கோலைப் போட்ட கொலம்பியா

படம்: Alfredo ESTRELLA / AFP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

கொலம்பியாவும் உஸ்பெக்கிஸ்தானும் (Uzbekistan) மோதிய ஆட்டத்தில் 3-1 எனும் கோல் வித்தியாசத்தில் கொலம்பியா வெற்றியைத் தட்டிச்சென்றது.

சிங்கப்பூர் நேரப்படி இன்று காலை 10 மணிக்கு மெக்சிகோவின் புகழ்பெற்ற எஸ்டேடியோ அஸ்டெகா (Estadio Azteca) அரங்கில் ஆட்டம் நடைபெற்றது.

இது உஸ்பெக்கிஸ்தானின் முதல் உலகக் கிண்ணப் போட்டி.

சென்ற முறை உலகக் கிண்ணப் போட்டிக்குத் கொலம்பியா தகுதிபெறத் தவறியது.

சற்றுத் தடுமாறிய கொலம்பிய அணி 41ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது.

60ஆவது நிமிடத்தில் உஸ்பெக்கிஸ்தானுக்கு முதல் கோல்.

5 நிமிடங்களுக்குப் பிறகு கொலம்பியா இரண்டாவது கோலைப் போட்டது.

ஆட்டம் முடியும்போது 9 நிமிடம் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

அப்போது கடைசி சில விநாடிகளில் கொலம்பியா மூன்றாவது கோலை அடித்து அசத்தியது.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்