Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

52 ஆண்டுகளுக்குப் பிறகு Knockout சுற்றுக்குச் செல்கிறது காங்கோ குடியரசு!

வாசிப்புநேரம் -
52 ஆண்டுகளுக்குப் பிறகு Knockout சுற்றுக்குச் செல்கிறது காங்கோ குடியரசு!

படம்: Reuters/Bernadett Szabo

வெளியீடு : 28 Jun 2026 11:46AM புதுப்பிப்பு : 28 Jun 2026 01:20PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

காங்கோ குடியரசும் உஸ்பெக்கிஸ்தானும் பொருதிய ஆட்டத்தில் 3-1 கோல் கணக்கில் காங்கோ குடியரசு வெற்றிபெற்றிருக்கிறது.

அது அடுத்த சுற்றுக்கு முன்னேறத் தகுதி பெற்றுள்ளது.

உஸ்பெக்கிஸ்தான் வெற்றி ஏதுமின்றி போட்டியிலிருந்து வெளியேறுகிறது.

ஆட்டத்தின் முற்பாதியில் 10ஆவது நிமிடத்திலேயே உஸ்பெக்கிஸ்தான் கோலை அடித்து முன்னிலை வகித்தது.

ஆனால் முன்னிலையைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.

பிற்பாதி தொடங்கிய பிறகு 68ஆவது நிமிடத்தில் காங்கோ குடியரசுக்கு முதல் கோல்.

10 நிமிடங்களுக்குப் பிறகு காங்கோ அதன் இரண்டாவது கோலை அடித்தது.

90 நிமிடங்கள் முடிந்த பிறகு கூடுதல் நேரத்தில் கடைசி கோலை அடித்து வெற்றியைத் தன் வசப்படுத்தியது காங்கோ குடியரசு.

52 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக் கிண்ணத்தில் கலந்துகொள்ளத் தகுதி பெற்ற காங்கோ குடியரசு முதன்முறையாகக் குழுச் சுற்றிலிருந்து முன்னேறுகிறது.

1974ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ணப் போட்டியில் காங்கோ குடியரசு 3 ஆட்டங்களிலும் கடுமையாகத் தோல்வியடைந்தது. அப்போது நாட்டின் பெயர் ஸெயிராக (Zaire) இருந்தது.

ஸெயிர் ஒரு கோலைக் கூட அடிக்கவில்லை. 9-0 எனும் கோல் கணக்கில் யூகோஸ்லாவியாவிடம் (Yugoslavia) தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியது.

இப்போது உலகக் கிண்ண வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுத காங்கோ குடியரசுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்