உலகக் கிண்ண வெற்றி - எக்குவடோரில் தேசிய விடுமுறை!
வாசிப்புநேரம் -
(படம்: REUTERS/Mike Segar)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
எக்குவடோர் உலகக் கிண்ணப் போட்டியின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியதைக் கொண்டாட அங்கு தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியை 2-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தி ஆட்டத்தை வென்றது எக்குவடோர்.
அது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
எக்குவடோர் அதிபர் டேனியல் நோபோவா (Daniel Noboa) இன்றைய நாளை (26 ஜூன்) தேசிய விடுமுறையாக அறிவித்தார்.
குறைகூறல், அவமானம் ஆகிய அனைத்தையும் தாண்டி நாட்டையே மகிழ்ச்சியில் ஆழ்த்திய விளையாட்டாளர்களுக்கும் பயிற்றுவிப்பாளருக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
எக்குவடோர் அணி போட்டியின் முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்தது.
இரண்டாவது ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
அது Knockout சுற்றுக்குத் தகுதி பெற்றிருப்பது இதுவே 2ஆவது முறை.
ஜெர்மனியும் போட்டியின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிவிட்டது.

ஆதாரம் : Reuters