Skip to main content
உலகக் கிண்ணப் போட்டியில் எகிப்துக்கு முதல் வெற்றி!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

உலகக் கிண்ணப் போட்டியில் எகிப்துக்கு முதல் வெற்றி!

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணப் போட்டியில் எகிப்துக்கு முதல் வெற்றி!

படம்: Reuters/Albert Gea

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

எகிப்து நியூஸிலந்து பொருதிய ஆட்டத்தில் 3-1 எனும் கோல் கணக்கில் எகிப்து வெற்றி பெற்றிருக்கிறது.

உலகக் கிண்ண வரலாற்றில் இதுவே எகிப்தின் முதல் வெற்றி.

ஆட்டத்தின் 15ஆவது நிமிடத்தில் நியூஸிலந்தின் ஃபின் சர்மன் (Finn Surman) முதல் கோலைப் போட்டார்.

முற்பாதி முடியும்வரை நியூஸிலந்து முன்னிலையைத் தக்கவைத்தது.

பிற்பாதியில் ஆட்டம் மாறியது.

58ஆவது நிமிடத்தில் முஸ்தஃபா ஸிக்கோ (Mostafa Zico) எகிப்தின் முதல் கோலை அடித்தார்.

67ஆவது நிமிடத்தில் நட்சத்திர ஆட்டக்காரர் முகமது சாலா (Mohamed Salah) இரண்டாவது கோலை அடித்தார்.

82ஆவது நிமிடத்தில் எகிப்துக்கு மூன்றாவது கோல்.

இதுவரை நடந்த G பிரிவு ஆட்டங்களில் எகிப்து மட்டும் ஒருமுறை வெற்றிபெற்றிருக்கிறது.

அதன் முதல் ஆட்டம் சமநிலையில் முடிந்தது.

ஈரான், பெல்ஜியம் விளையாடிய இரு ஆட்டங்களும் சமநிலையில் முடிந்தன.

அதனால் 4 புள்ளிகள் பெற்ற எகிப்து பிரிவில் முதல் இடத்தில் இருக்கிறது.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்