இங்கிலாந்து - மெக்சிகோ ஆட்டம்: குளறுபடிக்குப் பிறகு திட்டமிட்டபடியே நடக்கும்
வாசிப்புநேரம் -
படம்: REUTERS/Henry Romero
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இங்கிலாந்துக்கும் மெக்சிகோவுக்கும் இடையே நடக்கவிருக்கும் ஆட்டம் திட்டமிட்ட நேரத்திலேயே நடக்கும் என்று FIFA அதிகாரிகள் அறிவித்திருக்கின்றனர்.
மெக்சிகோ நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) மாலை 6 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி திங்கட்கிழமை, ஜூலை 6, காலை 8 மணிக்கு) ஆட்டம் நடைபெறும்.
மெக்சிகோவில் வானிலை மோசமாக இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டிருந்தது. அதனால் ஆட்டத்தை முன்கூட்டியே தொடங்குவது குறித்துப் பேச்சுவார்த்தை நடந்தது.
உள்ளூர் நேரப்படி நன்பகல் 12 மணிக்குத் தொடங்கலாம் என்று மெக்சிகோ ஊடகங்கள் தெரிவித்தன.
அந்த ஆட்டத்தின் தொடக்க நேரம் மாற்றப்பட்டால் பிரேசிலுக்கும் நார்வேக்கும் இடையிலான போட்டியின் தொடக்க நேரமும் மாற்றப்படும் என்று பிரேசிலிய ஊடகங்கள் கூறின.
அந்தக் குழப்பத்துக்குப் பிறகு மாற்றம் ஏதுமில்லை என்று FIFA அறிவித்துள்ளது.

ஆதாரம் : Reuters