Skip to main content
2026 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி - பரிசுத் தொகை உயர்கிறது

வாசிப்புநேரம் -
2026 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி - பரிசுத் தொகை உயர்கிறது

(கோப்புப் படம்: REUTERS/Brendan McDermid)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

2026 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பங்கெடுக்கும் 48 அணிகளுக்குமான பரிசுத் தொகையை அதிகரிக்க அனைத்துலகக் காற்பந்து சம்மேளனம் (FIFA) ஆலோசனை நடத்தி வருகிறது.

நாளை நடைபெறும் சம்மேளனத்தின் சந்திப்பில் அந்தப் பரிந்துரைக்கு ஒப்புதல் கிடைக்க வேண்டும்.

வரும் ஜூன் மாதம் போட்டி நடைபெறவுள்ளது. போட்டியின் பரிசுத்தொகை 655 மில்லியன் டாலர் எனச் சென்ற டிசம்பர் மாதம் சம்மேளனம் அறிவித்திருந்தது.

2022ஆம் ஆண்டு கத்தாரில் நடந்த போட்டிக்கான பரிசுத்தொகையைவிட அது 50 விழுக்காடு அதிகம்.

அந்த 655 மில்லியன் டாலர் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் வெற்றியின் அடிப்படையில் பிரித்து வழங்கப்படும்.

கிண்ணத்தைக் கைப்பற்றும் அணிக்கு 50 மில்லியன் டாலர்.

2ஆம் நிலையில் வரும் அணிக்கு 33 மில்லியன் டாலர்.

பங்கேற்கும் அனைத்து நாடுகளுக்குச் செலவுகளுக்கென 1.5 மில்லியன் டாலர் அளிக்கப்படும்.

போட்டி ஜூன் 11ஆம் தேதி முதல் ஜூலை 19ஆம் தேதிவரை நடைபெறும்.

ஆதாரம் : Reuters

மேலும் செய்திகள் கட்டுரைகள்