அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் முதல் நாடு பிரான்ஸ்
வாசிப்புநேரம் -
படம்: REUTERS/Paul Childs
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
பிரான்ஸ் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
மொரொக்கோவுடன் பொருதிய அணி, 2-0 எனும் கோல் கணக்கில் வெற்றி கண்டது.
முற்பாதியில் பிரான்ஸுக்குப் பெனால்ட்டி (penalty).
மொரொக்கோவின் கோல் காவலர் யாசின் போனோ (Yassine Bounou) அதைத் தடுத்துவிட்டார்.
பிற்பாதியில் ஆட்டத்தின் இரு கோல்களும் வந்தன.
60ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணித் தலைவர் கிலியான் எம்பாப்பே (Kylian Mbappe) தந்த கோல்.
அவர் இந்த உலகக் கிண்ணப் போட்டியில் அடித்திருக்கும் எட்டாவது கோல் அது.
ஆறு நிமிடங்கள் கழித்து, ஒஸ்மான் டிம்பலே (Ousmane Dembele) அணியின் அடுத்த கோலைப் போட்டார்.
சென்ற உலகக் கிண்ணப் போட்டியில் பிரான்ஸும் மொரொக்கோவும் அரையிறுதிச் சுற்றில் சந்தித்தன. அப்போது மொரோக்கோ பிரான்ஸிடம் தோல்வி கண்டது.
இம்முறை மொரொக்கோ பழி வாங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதியில் வெற்றி பிரான்ஸுக்கே.
பிரான்ஸ் அடுத்து ஸ்பெயின் அல்லது பெல்ஜியத்துடன் பொருதும்.
ஸ்பெயின்-பெல்ஜியம் காலிறுதிச் சுற்று சிங்கப்பூர் நேரப்படி நாளை (ஜூலை 11) அதிகாலை 3 மணிக்குத் தொடங்கும்.

ஆதாரம் : Others