ஜெர்மனிக்கு அதிர்ச்சி தோல்வி தந்த எக்குவடோர்!
வாசிப்புநேரம் -
(படம்: Reuters/ Vincent Carchietta-Imagn Images)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
எக்குவடோர் 2-1 எனும் கோல் கணக்கில் ஜெர்மனியை வென்று போட்டியின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளது.
ஆட்டத்தில் முதலில் கோல் அடித்தது ஜெர்மனி தான்.
அதன் பின்னர் இரு கோல்களைப் புகுத்தி எக்குவடோர் வெற்றியை உறுதிசெய்தது.
போட்டியில் அது விளையாடிய முதல் இரு ஆட்டங்கள் சமநிலையில் முடிந்தன.
இறுதி வாய்ப்பைக் கைவிட்டுவிடக்கூடாது என்று எக்குவடோர் அணி தீவிரமாக நம்பிக்கையுடன் விளையாடியது.
விளையாட்டாளர்களின் அந்த வேகம் ஆட்டத்திலும் தெரிந்தது.
ஜெர்மனி ஏற்கனவே Knockout சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டது.
எனினும் தோல்வி ஏமாற்றமளிப்பதாக ஜெர்மனியின் பயிற்றுவிப்பாளர் தெரிவித்தார்.
தமது அணி முறையாக விளையாடவில்லை என்றும் அவர் சொன்னார்.
எக்குவடோர் Knockout சுற்றுக்குத் தகுதி பெறுவது இதுவே 2ஆவது முறை.
அது 2006ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் முதல்முறையாக Knockout சுற்றுக்குத் தகுதி பெற்றது.

ஆதாரம் : AFP