1,000ஆவது உலகக் கிண்ணக் காற்பந்தாட்டம் - நிறைய எதிர்பார்ப்புகள்...
வாசிப்புநேரம் -
படம்: Julio Cesar AGUILAR / AFP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஜப்பானும் துனிசியாவும் நாளை (21 ஜூன்) பொருதவிருக்கும் ஆட்டம் FIFA உலகக் கிண்ணக் காற்பந்தின் 1,000ஆவது ஆட்டம்.
புதிய பயிற்றுவிப்பாளரின் கீழ் களமிறங்கவிருக்கும் துனிசியாவின் வேகத்துக்கு ஈடுகொடுக்கவேண்டும் என்று ஜப்பானிய அணி நிர்வாகி ஹஜிமே மொரியாசு (Hajime Moriyasu) தமது குழுவிடம் சொல்லிவைத்திருக்கிறார்.
சிங்கப்பூர் நேரப்படி நாளை நண்பகல் 12 மணிக்கு அந்த F பிரிவு அணிகள் மோதவிருக்கின்றன.
இதற்குமுன் நெதர்லந்தைச் சந்தித்த ஆட்டத்தில் ஜப்பான் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது.
துனிசியா சுவீடனிடம் 5-1 என்று படுதோல்வியடைந்தது.
நாளைய ஆட்டத்தை முன்னிட்டு விறுவிறுவெனப் பயிற்றுவிப்பாளரை மாற்றிவிட்டது துனிசியா.
பயிற்றுவிப்பாளர் சப்ரி லமுச்சியை (Sabri Lamouchi) அது பணிநீக்கம் செய்தது.
உலகக் கிண்ணக் காற்பந்து வரலாற்றிலேயே ஒரே ஆட்டத்துக்குப் பிறகு பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கும் முதல் பயிற்றுவிப்பாளர் அவர்தான்.
அவருக்குப் பதிலாக பிரெஞ்சு பயிற்றுவிப்பாளர் எர்வே ரெனா (Herve Renard) பணியமர்த்தப்பட்டுள்ளார்.
இதற்குமுன் கடுமையாக அடிவாங்கிய துனிசியா மேலும் வெற்றிபெறவேண்டும் என்ற உறுதியுடன் நிச்சயம் களமிறங்கும் என்று ஜப்பானிய அணி நிர்வாகி நம்புகிறார்.
அதற்குத் தயாராக இருக்கவேண்டும் என்று அவர் தமது அணியிடம் வலியுறுத்துகிறார்.

ஆதாரம் : AFP