Skip to main content
ஸ்பெயின்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

ஸ்பெயின்-அர்ஜென்ட்டினா ஆட்டத்துக்குப் பிறகு மூண்ட சண்டை

வாசிப்புநேரம் -
ஸ்பெயின்-அர்ஜென்ட்டினா ஆட்டத்துக்குப் பிறகு மூண்ட சண்டை

படம்: Reuters

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 20 Jul 2026 09:27AM புதுப்பிப்பு : 20 Jul 2026 11:43AM
உலகக் கிண்ண இறுதி ஆட்டம் முடிந்த பிறகு அர்ஜென்ட்டினா அணிக்கும் ஸ்பெயின் அணிக்கும் இடையே சண்டை மூண்டது.

அர்ஜென்ட்டினாவின் லியான்ட்ரோ பரேடெஸ் (Leandro Paredes) ஸ்பெயின் வீரர்கள் இருவரைத் தாக்கினார்.

ஸ்பெயின் வீரர் எரிக் கார்சியாவைக் (Eric Garcia) கழுத்தில் குத்தினார். இன்னொரு வீரர் காவியைக் (Gavi) கீழே தள்ளினார்.
Related article image
படம்: Reuters
பரேடெஸ்ஸைத் தடுக்க அர்ஜென்ட்டினா பயிற்றுவிப்பாளர் லயனல் ஸ்கலோனி (Lionel Scaloni) களத்தில் இறங்கினார்.

பரேடெஸ்ஸைப் பிடித்து இழுத்தார். அனைவருடைய கோபத்தையும் தணிக்க முயன்றார்.

இறுதியில் பரேடெஸ்ஸுக்குச் சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டது.

ஆட்டத்தின்போதே அர்ஜென்ட்டினாவின் என்சோ பெர்னாண்டஸுக்குச் (Enzo Fernández) சிவப்பு அட்டை.

உலகக் கிண்ண வரலாற்றில் இறுதிச்சுற்றின்போது அதிக முறை சிவப்பு அட்டை பெற்ற அணி அர்ஜென்ட்டினா. இதற்கு முன்னர் 1990ஆம் ஆண்டு இறுதிச்சுற்றில் அர்ஜென்ட்டினாவுக்கு இரண்டு சிவப்பு அட்டைகள் கொடுக்கப்பட்டன.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்