Skip to main content
உலகக் கிண்ணக் காற்பந்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

உலகக் கிண்ணக் காற்பந்து - மீண்டும் அர்ஜென்டினா தலைவராகிறார் மெஸ்ஸி

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணக் காற்பந்து - மீண்டும் அர்ஜென்டினா தலைவராகிறார் மெஸ்ஸி

(கோப்புப் படம்: REUTERS/Ricardo Moraes)

வெளியீடு : 29 May 2026 03:35PM புதுப்பிப்பு : 02 Jun 2026 01:09PM
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் அர்ஜென்டினா அணியின் தலைவராக மீண்டும் லயனல் மெஸ்ஸி (Lionel Messi) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

38 வயது மெஸ்ஸி அடுத்த மாதம் (ஜூன்) நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டியில் கலந்துகொள்வது பற்றி முன்னர் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

ஆனால் அவர் மீண்டும் அர்ஜென்டினா அணிக்குத் தலைமை வகிப்பார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

அவர் 6ஆவது முறை உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் கலந்துகொள்கிறார்.

2022ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது.

அடுத்த மாதம் 11ஆம் தேதி உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி தொடங்குகிறது.

5 நாளுக்குப் பின் அர்ஜென்டினா அல்ஜீரியாவை எதிர்த்து முதல் ஆட்டத்தில் களமிறங்கும்.

சென்ற முறை அர்ஜென்டினா வென்றபோது விளையாடிய 26 பேரில் 17 பேர் இம்முறை மீண்டும் விளையாடுகின்றனர்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்