"உலகக் கிண்ணத்தை வெல்லும் திறன் மொரொக்கோவுக்கு உண்டு"
வாசிப்புநேரம் -
(படம்: REUTERS/Bernadett Szabo)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
உலகக் கிண்ணப் போட்டியின் Knockout சுற்றுக்கு மொரொக்கோ முன்னேறியுள்ளது.
ஹெயிட்டியுடன் பொருதிய ஆட்டத்தில் 4-2 எனும் கோல் கணக்கில் மொரொக்கோ வெற்றி பெற்றது.
உலகக் கிண்ணத்தை வெல்லும் திறன் தமது அணிக்கு உள்ளது என்று மொரொக்கோ பயிற்றுவிப்பாளர் முகமது வஹ்பி (Mohamed Ouahbi) தெரிவித்தார்.
வெல்ல முடியும் என்று நம்ப வேண்டும். அதற்கு 100 விழுக்காடு அர்ப்பணிக்க வேண்டும் என்றார் அவர்.
C பிரிவில் முதலிடத்தில் உள்ள பிரேசிலும் போட்டியின் அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டது.
மொரொக்கோ பிரிவின் 2ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டது வருத்தமளிப்பதாக திரு வஹ்பி சொன்னார்.
திங்கட்கிழமை நடைபெறவுள்ள ஆட்டத்தில் அது F பிரிவின் வெற்றியாளரைச் சந்திக்கும்.
அது ஜப்பான், நெதர்லந்து, சுவீடன் ஆகிய நாடுகளில் ஒன்றாக இருக்கும்.
2022ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற போட்டியில் மொரொக்கோ அரையிறுதிச் சுற்றுவரை சென்றது.

ஆதாரம் : CNA