Skip to main content
மொரொக்கோவுக்கு அசத்தலான வெற்றி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

மொரொக்கோவுக்கு அசத்தலான வெற்றி

வாசிப்புநேரம் -
மொரொக்கோவுக்கு அசத்தலான வெற்றி

(படம்: REUTERS/Eloisa Sanchez)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மொரொக்கோ உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறியுள்ளது.

நெதர்லந்துக்கு ஏமாற்றம்.

ஆட்டத்தின் முதல் கோலைப் போட்டார் நெதர்லந்தின் கோடி காக்போ (Cody Gakpo).

கோல் போட்டதும் அவர் கண்கலங்கினார்.

ஒருசில தினங்களுக்கு முன்பு தான் அவரும் அவரது துணைவியும் பிறக்காத தங்களது ஆண் சிசுவை இழந்தனர்.

அணியின் மற்ற விளையாட்டாளர்கள் அவரை அரவணைத்து ஆறுதல் அளித்தனர்.

ஆட்டம் முடிந்து நெதர்லந்து வெற்றி பெறும் கடைசி தறுவாயில் மொரோக்கோ ஒரு கோலைப் போட்டது.

1-1 எனும் சமநிலை ஏற்பட்டது.

கூடுதல் நேரம் வழங்கப்பட்டும் இரு தரப்பிலும் வேறு கோல் இல்லை.

பெனால்டி சுற்றில் 3-2 எனும் கோல் கணக்கில் மொரோக்கோ வென்றது.

அது அடுத்து கனடாவைச் சந்திக்கும்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்