Skip to main content
உலகக் கிண்ணத்தில் அதிக ரசிகர்கள், அதிக கோல்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

உலகக் கிண்ணத்தில் அதிக ரசிகர்கள், அதிக கோல்கள் - சாதனை மழை

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணத்தில் அதிக ரசிகர்கள், அதிக கோல்கள் - சாதனை மழை

(படம்: IMAGN IMAGES via Reuters/Kiyoshi Mio)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இவ்வாண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை ஆக அதிகமான ரசிகர்கள் நேரில் கண்டு புதிய சாதனை படைத்துள்ளனர்.

1994ஆம் ஆண்டு பதிவான முந்தைய சாதனையை இது முறியடித்துள்ளதாக FIFA காற்பந்து அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுவரை 3.6 மில்லியனுக்கும் அதிகமானோர் போட்டிகளை நேரில் கண்டு ரசித்துள்ளனர்.

போட்டி முடிவடைய இன்னும் 48 ஆட்டங்கள் எஞ்சியுள்ளதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை விளையாட்டரங்குகள் சராசரியாக 99 விழுக்காட்டுக்கும் அதிகமாக நிரம்பியுள்ளன.

மற்றொரு சாதனையும் படைக்கப்பட்டுள்ளது....

இவ்வாண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் ஆக அதிகமான கோல்கள் பதிவாகியுள்ளன.

அமெரிக்கா-துருக்கியே ஆட்டத்தில் அடிக்கப்பட்ட கோலுடன், போட்டியில் போடப்பட்ட மொத்த கோல்கள் 173ஆனது.

கத்தாரில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில், 64 ஆட்டங்களில் 172 கோல்கள் மட்டுமே பதிவாகியிருந்தன.

ஆனால், இந்த ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியின் 59ஆவது ஆட்டத்திலேயே அந்தச் சாதனை முறியடிக்கப்பட்டுவிட்டது.

அமெரிக்கா-துருக்கியே ஆட்டத்தில் மேலும் இரண்டு கோல்கள் பதிவானதைத் தொடர்ந்து, மொத்த கோல்களின் எண்ணிக்கை 175ஆக உயர்ந்தது.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்